தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை, ஏப். 14: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் கிராமம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் நேற்று காலை அந்த வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து பாலத்தின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்துக்குள்ளான மினி லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: