திருக்கோவிலூர் தொகுதியில் 19 மனுக்கள் ஏற்பு

திருக்கோவிலூர், ஏப்.8: திருக்கோவிலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் சட்டசபை தேர்தலை ஒட்டி தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் சட்டசபை தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுவை கடந்த ஒரு வாரமாக தாக்கல் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் நேற்று (7ம் தேதி) வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு வேட்புமனு மீதான பரிசீலனை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, தாவக மற்றும் சுயேட்சைகள் என மொத்தமாக 28 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 19 மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்த் குமார் சிங் தெரிவித்தார்.

 

Related Stories: