சங்கராபுரம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டு

சங்கராபுரம், பிப். 18: கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் ஊராட்சி மன்ற தலைவராக பரமசிவம் உள்ளார். 4வது வார்டு உறுப்பினரான பாஸ்கர், ஊராட்சியில் முறைகேடு நடந்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து புகார்தாரருக்கு ஆவணங்களை கொடுக்க அதிகாரிகள் கூறினராம். இதனிடையே ஆவணங்களை தர தாமதம் செய்வதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்துக்கு நேற்று திடீரென பூட்டு போட்ட பாஸ்கர், தர்ணாவில் ஈடுபட்டார். அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், பாஸ்கரை அப்புறப்படுத்தி பூட்டை உடைத்து அலுவலகத்தை திறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: