அம்மச்சார் அம்மன் கோயிலில் பெண்கள் 108 பால்குட ஊர்வலம் திரளான பக்தர்கள் பங்கேற்பு மாசி மாத அமாவாசையையொட்டி

வந்தவாசி, பிப்.18: வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை அம்மச்சார் அம்மன் கோயிலில் மாசி மாத அமாவாசையையொட்டி பெண்கள் 108 பால் குடம் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர. வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள அம்மச்சார் அம்மன் கோயிலில் மாதந்தோறும் அமாவாசையன்று ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாசி மாத அமாவாசையையொட்டி அம்மனுக்கு 108 பால் குடம் ஏந்தி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். சித்தாத்தூர் அம்மன் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், கிராமத்தில் உள்ள முனீஸ்வரன், விநாயகர், பால விநாயகர் ஆலயங்களை சுற்றி கிராமத்தில் உள்ள முக்கிய விதிகள் வழியாக சென்று அம்மச்சார் அம்மன் கோயில் வந்தடைந்தது. இதில் பெண்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதையடுத்து அம்மனுக்கு 108 பால் குட அபிஷேகம் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: