ரஷ்யா டிரோன் தாக்குதலில் ஒருவர் பலி

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர். ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றது. போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் ஜெனிவாவில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனினும் இரு நாடுகளும் ஒன்றன்மீது ஒன்று தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது. ரஷ்யாவின் எல்லை நகரமன பெல்கோரோட்டில் நேற்று முன்தினம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஐந்து பேர் காயமடைந்தனர். இந்நிலையில் உக்ரைனின் ஒடேசா நகரத்தின் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. கட்டிடத்தின் மீது டிரோன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் காயமடைந்தனர்.

Related Stories: