காபூல்: ஆப்கானிஸ்தான் முழுவதும் பெய்த புயல், கனமழை, நிலச்சரிவால் இதுவரை 77 பேர் உயிரிழந்ததாகவும், 137 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. காபூலை பல்வேறு மாகாணங்களுடன் இணைக்கும் பல நெடுஞ்சாலைகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்துள்ளது. இதனால் காபூல் துண்டிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் கிழக்கு ஆப்கனுடன் இணைக்கும் காபூல்- ஜலால்பாத் நெடுஞ்சாலையும் மூடப்பட்டுள்ளது.
