இஸ்லாமாபாத்: ஈரான் போர் சூழலில் பாகிஸ்தானில் நேற்று முன்தினம் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாயில் 458.41 மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.520.35-க்கும் விற்பனை ஆனது. ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 43 % முதல் 55 % சதவீதம் உயர்ந்தது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதை கண்டித்து நடந்த போராட்டங்களை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு பெட்ரோல் விலையை நேற்று குறைத்துள்ளது.ஒரு லிட்டருக்கு பாகிஸ்தான் ரூபாயில் 80 வீதம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26.63) பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
