40 ஆண்டாக சிறையில் தவிக்கும் கருப்பின மரண தண்டனை கைதி வழக்கு தள்ளுபடி கோரி மனு

புரோவா: அமெரிக்காவில் கொலை வழக்கு விசாரணையில் அதிகாரிகள் முறைகேடு செய்ததால் 40 ஆண்டாக சிறையில் தவிப்பதாக குற்றம்சாட்டிய முன்னாள் மரண தண்டனை கருப்பின கைதி தனது வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி நீதிபதியிடம் மன்றாடி உள்ளார். அமெரிக்காவில் கடந்த 1985ம் ஆண்டு வெள்ளையின பெண்ணான ஈவா ஓலேசன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கான ஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே, டக்ளஸ் ஸ்டீவர்ட் கார்டர் என்ற கருப்பினத்தவரை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவர் ஓலெசனை கொலை செய்ததாக பெருமை பேசியதாக 2 பேர் சாட்சி அளித்தனர். மேலும் குற்றத்தை கார்டர் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் அவருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

பின்னர் யுட்டா உயர் நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில், சாட்சி அளித்த 2 பேரும் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து பொய் சாட்சி கூறியதாக ஒப்புக் கொண்டனர். போலீசார் தன்னை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக கார்டர் வாதிட்டார். இதனால் அவர் மீதான மரண தண்டனை கடந்த 2022ல் ரத்து செய்யப்பட்டு மறு விசாரணைக்கு நீதிபதி டெரரெக் புல்லன் உத்தரவிட்டார். இந்நிலையில் 70 வயதான கார்டர், விசாரணை அதிகாரிகள் செய்த முறைகேடு காரணமாக, செய்யாத குற்றத்திற்காக 40 ஆண்டாக சிறையில் தவிப்பதாகவும் தன் மீதான கொலை வழக்கை தள்ளுபடி செய்யுமாறும் யுட்டா உயர் நீதிமன்றத்திடம் மன்றாடி மனுதாக்கல் செய்துள்ளர்.

Related Stories: