வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற பிறகு டிரம்ப் பல்வேறு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது கல்லூரி விளையாட்டுக்களை கட்டுப்படுத்தும் புதிய உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கல்லூரி விளையாட்டு வீரர்கள் ஐந்து ஆண்டுகளில் அதிகபட்சமாக 5 சீசன்கள் மட்டுமே விளையாட முடியும். மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதற்கு முன், ஒரு முறை மட்டுமே இடமாற்றம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த விதிகளை மீறும் பல்கலைக்கழகங்கள் கூட்டாட்சி நிதியை இழக்க நேரிடும்.
