சூதாடிய 10 பேர் மீது வழக்கு

கடலுார், பிப். 14: கடலூரை அடுத்த திருவந்திபுரம் பகுதியில் காசு வைத்து சூதாடியதாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் எஸ்ஐ ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கே.என்.பேட்டை பகுதியிலுள்ள சவுக்கு தோப்பில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அங்கு சென்றதும் அங்கிருந்தவர்கள் தப்பியோடினர். அப்பகுதியில் சீட்டுக்கட்டு, 6 மோட்டார் பைக்குகள், ஒரு செல்போன் மற்றும் 1000 ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் திருவந்திபுரம் சாலக்கரையைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: