கரூர் வேலுசாமிபுரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியதாவது: வேலுசாமிபுரத்தில் 5 மாதத்துக்கு முன் 41 பேர் இறந்தது யாரால் நிகழ்ந்தது, எதனால் நிகழ்ந்தது எப்படி நிகழ்ந்தது என அனைவருக்கும் தெரியும். காவல்துறையின் தவறு, அரசின் தவறு, திமுகவின் தவறு, குண்டர்கள் உள்ளே புகுந்து சிலர் ஆசிட் வீசினார்கள், கழுத்தை நெரித்தார்கள் என கூறுகின்றனர். நான் கேட்கிறேன், தவெக கட்சியில் ஒரு ஆம்பளைக்கும், ஆத்தாளுக்கும் பிறந்தவர்கள் என்றால் கூறுங்கள் சரியான நேரத்திற்கு விஜய் வந்திருந்தால் இந்த மரணம் நடந்திருக்குமா? மனச்சாட்சி எதுவும் இல்லையா.
இந்த கூட்டத்தில் கரூர் காவல்துறையை கண்டிக்கிறேன், ஏன்? தெரியுமா? 41 பேர் மரணத்துக்கு காரணமாக இருந்து கோழையாக இருந்து, பச்சோந்தியாக இருந்து, கோழை போல ஒடிய அந்த பச்சோந்தியை எப்ஐஆரில் சேர்க்காத இந்த கரூர் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். விஜய்க்கு தெம்பும், தைரியமும், துணிச்சலும் இருந்திருந்தா நான் கரூரை விட்டு போகமாட்டேன், தைரியம் இருந்தா என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், இங்குதான் இருப்பேன் என கூறியிருந்தால் நான் விஜய் பக்கம் நின்றிருப்பேன். ஏன் வரல, இப்ப சொல்லுகிறார்.
மக்களுக்கு ஒன்னுனா? இந்த விஜய் வருவான் என்கிறார். அவன் பிடுங்குவான். காமராஜரும், கக்கனும், ஜீவானந்தமும், சிங்காரவேலும், தெய்வத்திரு முத்துராமலிங்க தேவரும் அரசியல் செய்த இந்த நாட்டில் இந்த சினிமா கூத்தாடி அயோக்கிய பயலை ஒழித்து கட்டுவதுதான் எங்கள் அரசியல். கலைஞர் ரோல்மாடல், ஜெயலலிதா ரோல் மாடல், ஆனால் அதிமுகவை ஒழிக்கனும், திமுகவை ஒழிக்கனும். டேய் யார்டா நீ. வீட்டுக்கு ஒரு விஜய் தேவையில்லை. வீட்டுக்கு ஒரு காமராஜ், கக்கன், முத்துராமலிங்க தேவர் போன்றோர்கள்தான் இருக்க வேண்டும். யார் நீ? நீ ஒரு தற்குறி, வீட்டுக்கு ஒரு தற்குறியை வளர்க்க எந்த பெற்றோரும் விரும்ப மாட்டார்கள்.
வளர்த்து ஆளாக்கிய அப்பா, அம்மாவையே அவர் கண்டு கொள்ளவில்லை. என் பெயரை பயன்படுத்தக்கூடாது எனகூறியவர் விஜய். அப்படிப்பட்ட ஒரு சைக்கோ எப்படி உங்களுக்கு உண்மையாக இருப்பார் என நம்புகிறீர்கள். படத்தில் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டு விடாதீர்கள் என வசனமும் பேசுவார், யார் பெற்ற மகனோ என பாடல் பாடுவார். ஆனால் இந்த கரூரில் சம்பவம் நடந்த போது, உடனே ஓடிப் போய்விட்டார். அவர் ஒரு ஓடுகாலி. கட்சியின் 3ம் ஆண்டு நிறைவு விழாவில் போய் நடனமாடுகிறார். எப்படி மனசு வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் யாராவது வந்து ஆடுவார்களா? இவ்வாறு அவர் பேசினார்.
