விஜய்யை பார்த்து டெல்லியே நடுங்குது!செங்கோட்டையனுக்கு பயம் போயிடுச்சு போல…

 

கோபி கரட்டடிபாளையத்தில் நேற்று முன்தினம் இரவு தனியார் மண்டபத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: கோபி தொகுதியில் வெற்றி கூட்டத்தை நடத்தப் போவதாக எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.

ஆனால் விஜய் யாரை கை காட்டுகிறாரோ அவர்கள் தான் 234 தொகுதிகளிலும் எம்எல்ஏவாக வருவார்கள். விஜய்யுடன் எந்த நேரத்திலும் தொலைபேசியில் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு இருக்கிறது. சென்னைக்கு சென்றாலும் அவரை சந்திக்கின்றேன். பேசாமல் இருப்பவரை பேச வேண்டும் என கேட்கின்றார்கள். அவர் எப்போது பேசுவார் எதை பேசுவார் என்பது அவருக்கு தெரியும். ஜனநாயகன் வெளியிடப்படாவிட்டாலும் பரவாயில்லை என்று ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வந்துள்ளார்.

கரூர் சம்பவத்திற்கு பிறகும், ஜனநாயகன் முடக்கப்பட்ட பிறகும் விஜய் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட பிறகு வாக்குசதவீதம் 42 ஆக உயர்ந்துள்ளது. மற்ற அனைத்து கட்சிகளும் சேர்ந்து 48 சதவீதத்தை எட்டிப் பிடிக்க முடியவில்லை. இதனால் தான் டெல்லி நம்மை கண்டு பயப்படுகிறது.

விஜய் அறிக்கை விட்டால் ஒரு மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள். 1 கோடியே 28 லட்சம் பேரை தாண்டி உறுப்பினர் சேர்க்கை சென்றுள்ளது. மற்ற கட்சிகளை போல் ஏமாற்ற முடியாது. வாக்காளர் அடையாள அட்டையை வைத்து தான் உறுப்பினராக சேர்த்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுகவில் செங்கோட்டையன் இருந்தவரைக்கும், டெல்லி பாஜ சொல்ற ரூட்டுல போயிட்டு இருந்தாரு… அவங்க சொல்லிதான் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்குனேன்னு சொன்னாரு… அதுக்கு அப்புறம் எடப்பாடி நெருக்கடியால் செங்கோட்டையனை பாஜ கழற்றிவிட்டதால் விஜய்கிட்ட போய் சரண்டர் ஆனாரு… இப்போ விஜய்யை பார்த்து டெல்லி நடுங்குதுன்னு பேசியதை பார்த்து தவெகவினரே, செங்கோட்டையனுக்கு டெல்லி மேல இருக்குற பயம் போயிடுச்சு போல…அதான் வீராப்பா பேசுறாரு’’ என்று கிண்டலடித்து வருகின்றனர்.

*‘விஜய்யை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப்போவதில்லை’

செங்கோட்டையன் பேசுகையில், ‘நான் இங்கே வரவில்லை என்றால் என்னை குப்பைத்தொட்டியில் தூக்கி வீசி இருப்பார்கள். அது நடந்து முடிந்த ஒன்று. 50 ஆண்டுகால அரசியலில் அனுபவம் வாய்ந்த என்னை ஒரே நிமிடத்தில் தூக்கி வீசினார்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர்கள், நன்றியை மறந்தவர்கள். மனம் நொந்து போய் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே என்னை தூக்கி வீசியதற்கு பிறகு ஒரே நொடியில் என்னை தூக்கி விட்டவர் விஜய். விஜய்யை கோட்டைக்கு அனுப்பும் வரை ஓயப் போவதில்லை’ என்றார்.

Related Stories: