மதுரை: நடிகர் ரஜினிகாந்தை விமர்சித்த ஆதவ் அர்ஜூனாவை விஜய் ஏன் கண்டிக்கவில்லை என பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இன்று காலை மதுரையில் அவர் கூறியதாவது:
தவெக கூட்டணியில் வருமா? வராதா? என்பதைப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் டெல்லிக்கு செல்லவில்லை. திரையின் முடிசூடா மன்னராக திகழும் ரஜினிகாந்தை ஆதவ் அர்ஜூனா விமர்சித்தது வருந்தத்தக்கது. தவெக தலைவர் விஜய் ஏன் இதைக் கண்டிக்கவில்லை.
இதுதான் எங்கள் கேள்வி. ரஜினிகாந்த் ரசிகர்களும் இதை ஏற்க மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதை கண்டித்து பாஜக சார்பில் அறிக்கை விட்டோம். முதலில் குரல் கொடுத்தது பாஜகதான். வருத்தம் தெரிவிப்பார் என பார்த்தோம்.
இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை. என்டிஏ கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் எந்தச் சிக்கலும் இல்லை. 30ம் தேதி வரை நாமினேஷன் போடலாம். 15 நாட்கள் வரை இருக்கிறது. எந்தச் சிக்கலும் இல்லை. எங்களுக்குள் ஒருமித்த கருத்தும், சுமூக நிலையே இருக்கிறது என்றார்.
