டிஜிபிக்கள் நியமன விவகாரம் உரிய நேரத்தில் பரிந்துரைக்காத மாநிலங்கள் மீது நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் டி.ஜி.பி நியமனம் செய்வது தொடர்பான பரிந்துரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில டிஜிபி பரிந்துரை தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,‘‘‘மாநில காவல்துறை தலைவர் பதவிகளுக்கு உரிய நேரத்தில் பரிந்துரைகளுக்கான முன்மொழிவுகளை குறித்த நேரத்தில் அனுப்புமாறு மாநிலங்களுக்கு கடிதம் எழுத யு.பி.எஸ்.சி நிர்வாகத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

மேலும் டி.ஜி.பி பதவிகளுக்கு குறித்த நேரத்தில் முன்மொழிவுகள் அனுப்பாத மாநிலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சூழல் ஏற்பட்டால் யு.பி.எஸ்.சி நிர்வாகமானது நீதிமன்றத்தை நாடி மனு தாக்கல் செய்யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடத்தில் உரிய விளக்கம் கேட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: