மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான புதிய திட்டங்கள்: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்தது

பெங்களூரு: மகளிர் மற்றும் மூத்த குடிமக்களுக்கான புதிய திட்டங்களை சிட்டி யூனியன் வங்கி அறிமுகம் செய்தது. சிட்டி யூனியன் வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு பெங்களூருவில் நடந்தது. இதில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்ஷல் பட்டேல், ஹென்றிச் கிளாஸன், டிராவிஸ் ஹெட் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி வரவேற்று பேசினார். காமகோடி, விலாசினி காமகோடி, வங்கியின் முன்னாள் இயக்குனர் அபர்ணா பாஸ்கர், செயல் இயக்குனர்கள் விஜய் ஆனந்த், ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் மகளிருக்கான சிறப்பு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் டெபிட் கிரெடிட் கார்டுகள் சியுபி பிங்க், சியுபி பாரதி, சியுபி ஸ்வர்ணா, அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், மூத்த குடிமக்களுக்காக சியுபி ஆசீர்வாத் சியு பி ஜீவன் சியுபி உபயோக் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடி திட்டங்களின் சிறப்புகளை பற்றி விவரித்தார். கிரிக்கெட் வீரர்கள் கலந்துரையாடல் நடந்தது. வங்கியின் வாடிக்கையாளர்கள், மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: