வந்தே பாரத் ரயில் பாக்கெட் தயிரில் புழுக்கள்: ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம்; விற்பனையாளருக்கு ரூ.50 லட்சம் அபராதம்

புதுடெல்லி: பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரிதேஷ் குமார் சிங் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 15ம் தேதி பாட்னா டாடாநகர் வந்தே பாரத் ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அவர்களுக்கு இரவில் உணவுடன் தயிர் பாக்கெட்டுகள் தரப்பட்டன. அவர்கள் தயிர் பாக்கெட்டை திறந்தபோது அதனுள் உயிருடன் புழுக்கள் நௌிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ரிதேஷ் குமார் சிங் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வௌியிட்டார். அதை ஐஆர்சிடிசி, ரயில்வே அமைச்சர் உள்ளிட்டோருக்கும் அந்த டிவிட்டை பகிர்ந்தார். மேலும் இதுகுறித்து ரயில்வே மேலாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “உணவில் புழு இருந்த விவகாரத்தில் ஐஆர்சிடிசிக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா என்டர்பிரைசஸ் என்ற உணவு விற்பனையாளருக்கு முதலில் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, பின்னர் அது ரூ.50 லட்சமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் கிருஷ்ண என்டர்பிரைசஸ்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: