புதுடெல்லி: பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதால் ரூ.111.98கோடி அளவுக்கு இழப்பை சந்திப்பதாக பாரத ஸ்டேட் வங்கி புகார் அளித்தது. இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அப்போதைய இயக்குனர்கள் சதீஷ் சேத் மற்றும் கவுதம் பி தோஷி ஆகியோரின் வீடுகளிலும், ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
