கொல்கத்தாவில் பலத்த மழை, சூறாவளி மம்தா சென்ற விமானம் தாமதமாக தரையிறக்கம்

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் விரைவில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி பஸ்சிம் பர்தமான் மாவட்டம் அண்டாள் என்ற இடத்தில் நடந்த பிரசார பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அண்டாள் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தலைநகர் கொல்கத்தாவுக்கு திரும்பினார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்ட விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் மாலை 4 மணிக்கு தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவியதுடன், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் அனைத்து பணிகளும் முடங்கின. இந்நிலையில் மாலை 4 மணிக்கு தரையிறங்க வேண்டிய மம்தா பானர்ஜினியின் விமானம், நீண்ட நேரம் வானில் வட்டமடித்தபடி இருந்தது. பின்னர் மாலை 5.19 மணிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Related Stories: