திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சங்கம்- காளிகிரி சாலையின் மேற்குப் பகுதியில் சிறிய மலை உள்ளது. இந்த மலைக்கு அருகே உள்ள ஒரு தனியார் நிலத்தின் வழியாக நேற்றுமுன்தினம் ஒரு மர்ம கும்பல் வந்துள்ளது. அங்கு மந்திரவாதியோடு பூஜைகள் செய்து, பாறைகளை அகற்றி குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது நெல்லூரை சேர்ந்த கேசவுலு அவ்வழியாக ஆடுகளை மேய்சலுக்கு அழைத்து சென்றார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மலையில் குழி தோண்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பினர். மலையில் இருந்து புதையல் எடுக்க மந்திரவாதி மூலம் பூஜை செய்து பள்ளம் தோண்டியிருக்கலாம் என்று தெரிகிறது. போலீசாா் ஆய்வு செய்த போது அங்கு பாறைகளை அகற்றி விட்டு 100 அடி ஆழம் வரை குழி தோண்டப்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
