சண்டிகர்: சண்டிகர் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான தேர்தலில் பாஜ சார்பில் சவுரவ் ஜோஷி, ஆம் ஆத்மியின் யோகேஷ் திங்ரா மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் குர்பிரீத் சிங் ஆகியோர் போட்டியிட்டனர். 35 உறுப்பினர்களை கொண்ட சண்டிகர் மாநகராட்சியில் பாஜகவுக்கு 18 கவுன்சிலர்கள் வாக்களித்தனர். ஆம் ஆத்மிக்கு 11 கவுன்சிலர்களும், காங்கிரஸ் வேட்பாளருக்கு 6 கவுன்சிலர்களும் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து பாஜ வேட்பாளர் சவுரப் ஜோஷி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
