திருமலை: தெலங்கானா மாநில சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குனர் லட்சுமிநாராயணா. இவரது மனைவி ஊர்மிளா. இவரது வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த லிங்க்கில் பங்குச்சந்தை முதலீடுகள் என்ற பெயரில் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 500 மடங்கு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த ஊர்மிளா ரூ.2.58 கோடி முதலீடு செய்துள்ளார். அதன்பின் மோசடி என்பதை தெரிந்தது போலீசில் புகார் அளித்தார். போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
