ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் இந்திய உற்பத்தியாளர்கள் நன்கு பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியா சீர்திருத்த விரைவுப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. கடைக்கோடி மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்களின் பலன்கள் சென்றடைவதில் அரசாங்கம் முழு கவனம் செலுத்துவதை எங்களின் விமர்சகர்கள் கூட ஒப்புக் கொள்கின்றனர். இது அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களுடனும் இனியும் தொடரும். இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை அமைப்பு உலகிற்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது. இந்த ஆண்டு மிகவும் நேர்மறையான குறிப்புடன் தொடங்கியுள்ளது. நம்பிக்கையான இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் கதிராகவும், ஈர்ப்பு மையமாகவும் உருவெடுத்துள்ளது. இந்தக் காலாண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஏற்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவின் இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்தையும், வரவிருக்கும் நம்பிக்கைக்குரிய திசைகளையும் பிரதிபலிக்கிறது.

இந்த ஒப்பந்தம் முன்னேறத் துடிக்கும் இந்தியாவிற்கும், லட்சியம் கொண்ட இளைஞர்களுக்கும், தற்சார்பு இந்தியாவிற்கும் ஆன தடையற்ற வர்த்தகமாகும். இந்திய உற்பத்தியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் திறன்களை மேம்படுத்துவார்கள் என நம்புகிறேன். தொழில் தலைவர்கள், உற்பத்தியாளர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த தரமான தயாரிப்புகள் மூலம் 27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சந்தையில் நுழைந்து லாபம் ஈட்டுவது மட்டுமல்லாமல், இந்திய பிராண்டுகள் புதிய கவுரவத்தை உருவாக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

* நிர்மலா சீதாராமன் 9வது பட்ஜெட் தாக்கல் செய்வது பெருமையானது
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இவ்வாறு செய்த நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் இவரே. இந்த தருணம் இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது’’ என்றார். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் 9 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவை தொடர்ச்சியான ஆண்டுகளாக இல்லை.

* அட…இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… 17 கோடி பேருக்கு வேலை கொடுத்தாச்சு… சொல்வது ஒன்றிய அரசு தான்…
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்றார் பிரதமர் மோடி. ஆனால் வேலைவாய்ப்பை உருவாக்கவும், வழங்கவும் அவரால் முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் 10 ஆண்டுகளில் 17 கோடி பேருக்கு வேலை வழங்கி விட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்து தகவல் தெரிவித்த ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்,’ கடந்த ஓராண்டில் நாடு முழுவதும் 18,000 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டது. நாட்டில் வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாக குறைந்து வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை 18 வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்பாடு செய்து, அரசுத் துறையில் 11.49 லட்சம் வேலைகளை வழங்கியுள்ளது.

தேசிய தொழில் சேவை இணையதளத்தில் 55 லட்சம் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதனுடன் அனைத்து மாநில அரசு தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 6 கோடிக்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். கடந்த 2004-2014 வரை மொத்தம் 2.9 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 2003-04 ஆம் ஆண்டில் 44.23 கோடி வேலைவாய்ப்புகளிலிருந்து 2013-14 ஆம் ஆண்டில் 47.15 கோடி வேலைவாய்ப்பு வாய்ப்புகளாக அதிகரித்தது. 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி 64.33 கோடி வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி பேருக்கு வேலை வழங்கப்பட்டுவிட்டது’ என்றார்.

* ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மெகா மோசடி
ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2019ல் மோடி அரசால் தொடங்கப்பட்டது. 2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் (தலா ஒருவருக்கு 55 லிட்டர்) வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியத் திட்டமாகும். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதிப் பகிர்வு பொதுவாக 50:50, வடகிழக்கு மாநிலங்களுக்கு 90:10 அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இதற்காக ரூ.67 ஆயிரம் கோடி நிதி பட்ெஜட்டில் ஒதுக்கப்பட்டது. இதில் நாடு முழுவதும் மெகா முறைகேடு நடந்துள்ளது.

உபி, ராஜஸ்தான், குஜராத், மபி போன்ற மாநிலங்களில் பணி முடிந்து விட்டதாக கூறி போலி பில்கள் தயார் செய்யப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 621 துறைசார் அதிகாரிகள், 969 ஒப்பந்தக்காரர்கள் மற்றும் 153 மூன்றாம் தரப்பு முகமைகள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. 84 சதவீத புகாருடன் உபி முதல் இடத்தில் உள்ளது. 7 மாநிலங்களுக்கு ₹129.27 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்திற்கு மட்டும் அதிகபட்சமாக ரூ.120.65 கோடி விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: