திருவள்ளூர், ஜன.30: வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி நாளை மறுநாள் (1ம்தேதி) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள என்று கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் ெவளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து விதமான மதுபான சில்லறை கடைகள் மற்றும் மதுபான உரிம ஸ்தலங்களை, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினமான வரும் பிப்.1ம் தேதி தற்காலிகமாக மூடுவதற்கு ஆணையிடப்படுகிறது. எனவே, இதனை மீறி அனைத்து விதமான மதுபான சில்லறை கடைகள் மற்றும் மதுபான உரிம தளங்களை திறந்து வைத்தால், டாஸ்மாக் நிறுவன பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் 1ம்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
- வடலூர் இராமலிங்கர் நினைவு நாள்
- டாஸ்மாக்
- திருவள்ளூர்
- கலெக்டர் பிரதாப்
- திருவள்ளூர் மாவட்டம்
- கலெக்டர்
- பிரதாப்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
