மும்பை : அஜித் பவார் சென்ற விமானத்தை இயக்கிய விமானி சுமித் கபூர் மிகவும் அனுபவமிக்கவர் என்று விமான நிறுவன அதிபர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அஜித் பவார் சென்ற விமானத்தை தரையிறக்கியது விமானி சுமித் கபூர் எடுத்த முடிவுதான். முதலில் ஓடுபாதை எண் 29ல் தரையிறக்க முயன்றார், இயலாததால் ஓடுபாதை எண் 11ல் தரையிறக்கினார். விமானம் நன்றாக பராமரிக்கப்பட்டு வந்தது; அதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
