புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் நாளை தொடங்குகிறது. இது குறித்து ஆலோசிக்க டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
