டெல்லி: கனடா பிரதமர் மார்க் கார்னி மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். சுமார் ரூ.17,500 கோடி மதிப்பில் யுரேனியம் விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்பு என எதிர்பாக்கப்படுகிறது. இந்தியாவுடன் அணுசக்தி, எண்ணெய், எரிவாயு, சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளிலும், கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
