திருப்பரங்குன்றம் : உடைந்து ஒட்ட வைத்த பானைதான் அதிமுக என திருப்பரங்குன்றத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ” உடைந்து ஒட்ட வைத்த பானையில் உள்ள வாக்குகள் பிற கட்சிகளுக்கு சென்றதா என தேர்தலுக்கு பின்தான் தெரியும், வேண்டியவர்களுக்கு சின்னம் வழங்கும் தேர்தல் ஆணையம், வேண்டாதவர்களுக்கு வழங்க மறுக்கிறது. ஆளுநர் ரவி மரபை மீறி செயல்படுகிறார், அவரது வைரஸ் கேரளா, கர்நாடகாவிலும் பரவி உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
