கரூரில் நடந்த கொலை சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜன. 28: கரூரில் நடந்த கொலையை கண்டித்து திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் பவானி மோகன் கலந்து கொண்டு பேசினார். கரூரில் கடந்த 6ம்தேதி நடைபெற்ற கொலை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, குரலற்ற விழிம்பு நிலையில் வாழக்கூடிய சமூக மக்களுக்கு பாதுகாப்பு, பாதிக்கப்பட்டவர்களுகக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் புரிந்து கொண்டோருக்கும், திருமணம் புரிய இருப்போர்களுக்கும் பாதுகாப்பு வழங்க தனி ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும். சாதிமறுப்புத் திருமணம்புரிந்தோருக்கு அரசு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையும் இதில் வலியுறுத்தப்பட்டன.

Related Stories:

>