உடனே அகற்ற கோரிக்கை டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

குளித்தலை, ஜன. 28: குளித்தலை அடுத்த பொய்யாமணி கோரை பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை மகன் விஜயகுமார் (37). விவசாயி . கடந்த 26ம் தேதி விஜயகுமார் கோரை பட்டியிலிருந்து கஞ்சிக்கு நெல் மூட்டை டிராக்டரை ஏற்றிக் கொண்டு இறக்கி விட்டு மீண்டும் கோரைபட்டிக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டில் வலதுபுறம் டிராக்டர் கவிழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே விஜயகுமார் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த அவரது சகோதரர் செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சேர்த்தார். அதன் பிறகு குளித்தலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>