புதுடெல்லி: அசாம் மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த ரயிலின் தொடக்கப் பயணத்தின் போது ஒரு பெட்டியில் பிளாஸ்டிக் குப்பைகள் கிடந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. நவீன ரயிலை சாலையோர குப்பை தொட்டி போல் பயணிகள் பயன்படுத்தக்கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
