புதுடெல்லி: டெல்லி, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள பல இடங்களில் இருந்து சுமார் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்புள்ள கோகைன் மற்றும் கஞ்சா கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்ட வீரேந்திர பசோயா மற்றும் அவரது மகன் ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றனர். வீரேந்திர பசோயா மகன் ரிஷப்பிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்த கும்பலுடன் தொடர்புடைய சிக்கிமை சேர்ந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் திலக் பிரசாத் சர்மா(40) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடத்தல் கும்பலுக்காக தாய்லாந்தில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து விநியோகம் செய்து வந்தாக கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 1,290 கிலோ கோகைன் மற்றும் மெபெட்ரோன் மற்றும் 40 கிலோ தாய் கஞ்சாவை மீட்டனர். பாகிஸ்தான், இங்கிலாந்து, மலேசியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவுக்கும் கடத்தியது தெரிய வந்தது. இந்த வழக்கில் இதுவரை 17 குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டைச் சேர்ந்த பலரும் தலைமறைவாக உள்ளனர்.
