கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் கீழ் விசாரணைக்காக அமைச்சர் தாஜ்முல் ஹோசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாஜ்முல் ஹோசைன். இவர் தற்போது சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஜவுளித்துறைக்கான அமைச்சராக உள்ளார். இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் கீழ் வருகிற 29ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவரது பெயருக்கும் தந்தையின் பெயருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சர் தாஜ்முல் கூறுகையில்,”சட்டமன்றத் தேர்தலில் என்னை மூன்று முறை வெற்றிபெற்றதாக அறிவித்த அதே தேர்தல் ஆணையம் இப்போது நான் சரியான வாக்காளரா என்பதை சரிபார்க்க முயற்சிக்கிறது” என்றார்.
எஸ்ஐஆர் விசாரணைக்காக திரிணாமுல் அமைச்சருக்கு நோட்டீஸ்
- திரிணமுல்
- அமைச்சர்
- ஐயா
- கொல்கத்தா
- தாஜ்முல் ஹொசைன்
- மேற்கு வங்கம்
- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்…
