லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ். இவரது மகன் பிரதீக் யாதவ். இவரது மனைவி அபர்ணா யாதவ். இவர் உத்தரப்பிரதேச மாநில மகளிர் ஆணையத்தின் துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் பிரதீக் யாதவ், தனது மனைவி குடும்ப உறவுகளை சீர்குலைத்துவிட்டதாக சமூக வலைதள பதிவில் குற்றம்சாட்டியுள்ளார். அதில் பிரதீக் யாதவ், மனைவி அபர்ணா யாதவ் குடும்பத்தை அழிப்பவர். அவர் சுயநலவாதி. புகழ் மற்றும் செல்வாக்கை தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்.
இந்த சுயநலவாதிப் பெண்ணை நான் விரைவில் விவாகரத்து செய்யப் போகிறேன். அவள் என் குடும்பத்தின் உறவுகளை சீர்குலைத்துவிட்டாள். இப்போது நான் மிகவும் மோசமான மனநிலையில் இருக்கிறேன். ஆனால் அவள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். இவ்வளவு மோசமான ஒரு ஆத்மாவை நான் பார்த்ததில்லை. அவளை திருமணம் செய்து கொண்டது என் துரதிர்ஷ்டம்” என்று புலம்பியிருக்கிறார். இது தொடர்பாக பதிலை பெறுவதற்கு அபர்ணா யாதவை தொடர்பு கொள்ள முடியவில்லை.
