அமைச்சர் அலுவலகம் முன் அமர்ந்து சுயேச்சை எம்எல்ஏ திடீர் தர்ணா: புதுவை சட்டசபையில் பரபரப்பு

 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகம் முன் அமர்ந்து சுயேச்சை எம்எல்ஏ நேரு திடீர் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள வீடுகளுக்கு தொடர்ந்து சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம், உப்பனாறு கழிவுநீர் கலப்பதை தடுக்காதது, அங்கன்வாடி சீரமைக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தொகுதி எம்.எல்.ஏ நேரு, பொதுப்பணித்துறை அமைச்சரின் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் அமைச்சரின் தனி செயலர் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து அமைச்சர் அறை முன் எம்.எல்.ஏ தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சர் அறையின் உள்ளே அதிகாரியுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். மேலும் நேருவை தனது அறையில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

Related Stories: