திருமலை: ஏலூரு மாவட்டத்தில் மாமியார் வீட்டில் மருமகனுக்கு 1,116 வகை விருந்து வைக்கும் வீடியோ வைரலானது. ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகைக்காக மாமியார் வீடுகளுக்குச் சென்ற மருமகன்களுக்கு வீட்டில் வைக்கும் விருந்தோம்பல் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. நரசிப்பட்டினத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் கலாவதி தம்பதியினர் புதிய மருமகன் ஸ்ரீஹர்ஷா மற்றும் மகள் லட்சுமி நவ்யா ஆகியோருக்கு 290 வகையான உணவுகளுடன் சுவையான விருந்தை வழங்கினர். இந்நிலையில் ஏலுரு மாவட்டம் கைகலூரு கிராமத்தை சேர்ந்த சர்வதேச வைஷ்ய கூட்டமைப்பு சேவா தளத்தின் மாநிலத் தலைவர் கோனா ஹனுமான் பாபு மற்றும் கல்யாணி தம்பதியினர், மேற்கு கோதாவரி மாவட்டம் தடேபள்ளிகுடேமைச் சேர்ந்த மருமகன் நாராயணம் சஞ்சய் மற்றும் மகள் ஸ்ரீஜலா ஆகியோருக்கு 1,116 விதமான உணவுகளுடன் கூடிய உணவைப் பரிமாறி புதிய சாதனை படைத்தனர். திருமணத்திற்குப் பிறகு முதல் சங்கராந்திக்கு மாமியார் வீட்டிற்கு வந்திருந்த சஞ்சய்க்கு, 1,116 விதமான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது.
