தொழில்துறையில் முதலீட்டை அதிகரித்து உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: பட்ஜெட்டுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் பிரதமர் மோடி பேசியதாவது:நாட்டின் பொருளாதாரத் தூண்களான உற்பத்தி, தளவாடங்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியில் சாதனை செய்வதற்கான காலம் முடிந்து விட்டது. நாம் ஆராய்ச்சி மேம்பாட்டில் கணிசமான முதலீடுகளை செய்ய வேண்டும்.மேலும் நமது தயாரிப்புகள் உலக தரத்திலானது என்பதை உறுதி செய்ய வேண்டும். இப்போது நாம் முன்னேற வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

நமக்கு தரம் என்ற ஒரே ஒரு மந்திரம் மட்டுமே இருக்க வேண்டும். இந்தியா பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டிற்கு பரந்த அளவிலான வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், தரத்தில் ஒரு போதும் சமரசம் செய்ய கூடாது. இன்று உலகம் நம்பகமான, உறுதியான உற்பத்தி கூட்டாளரை தேடுகிறது. இந்த பங்கை நிறைவேற்ற இந்தியாவுக்கு வலுவான வாய்ப்புகள் உள்ளன. எனவே தொழில்துறையில் முதலீட்டை அதிகரித்து, ஆராய்ச்சிக்கு முன்னுரிமை அளித்து, உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

Related Stories: