அமெரிக்கா -பாக் கூட்டுப்பயிற்சி: மோடி அரசு மீது காங். சாடல்

புதுடெல்லி: கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பப்பி நகரத்தில் உள்ள தீவிரவாத எதிர்ப்பு மையத்தில் இன்ஸ்பயர்ட் கேம்பிட் 2026 என்ற பயிற்சியில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் இணைந்து கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன. இது தொடர்பாக பிரதமர் மோடி அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘தன்னைத்தானே விஸ்வகுரவாக அறிவித்துக்கொண்டவரின் (பிரதமர் மோடி) தற்பெருமை பேசும் ராஜதந்திரங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு பின்னடைவாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது\\” என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் டிரம்ப் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகள் தனது தலையீட்டால் தான் நிறுத்தப்பட்டதாக மீ்ணடும் கூறியுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: