சிவகங்கை, ஜன.14: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சூசையப்பர்பட்டிணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சமத்துவ கூட்டுறவு பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் காளையார்கோவில் கள அலுவலர், ஜெயபிரகாஷ், சிவகங்கை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பொன்ராஜ், கூட்டுறவு சங்க செயலாளர்கள் செந்தில் குமார், கலைச்செல்வன், ரவி, காளீஸ்வரி, ஸ்டெல்லா, வசந்தி, அழகர்சாமி மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
