சித்தூர் : சித்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில். இக்கோயிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
அவ்வாறு பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப கோயிலில் உள்ள, உண்டியலில் காணிக்கை செலுத்தி செல்கின்றனர். இந்நிலையில் கோயில் நிர்வாகம் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று கோயில் செயல் அலுவலர் பென்சிலகிஷோர் தலைமையில், கடந்த 19 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோயில் அருகே உள்ள ஆஸ்தான மண்டபத்தில் போலீஸ் பாதுகாப்புடன் காணிக்கை என்னும் பணி நடந்தது.
இதில் ரூ.1 கோடியே 51 லட்சத்து 15 ஆயிரத்து 630 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். அதேபோல் தங்கம் 25 கிராம், வெள்ளி 1 கிலோ 200 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அதேபோல் கோ பராமரிப்புக்கு வைக்கப்பட்ட உண்டியலில் ரூ.9 ஆயிரத்து 178 அன்னதான உண்டியலில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 869 பணம் காணிக்கையாக செலுத்தி உள்ளார்கள்.
அதேபோல் வெளிநாட்டு பணமான யுஎஸ்ஏ 709 டாலர் , ஆஸ்திரேலியா 40 டாலர், மலேசியா 32 ரிங்ஸ் சிங்கப்பூர் 55 டாலர், கனடா 35 டாலர், யூரோ 5 பணம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர் என்று கோயில் செயல் அலுவலர் பென்சிலகிஷோர் தெரிவித்தார்.
இதில் கோயில் இணை செயல் அலுவலர்கள் சேகர்பாபு, சித்தேம்மா, ரவீந்திர பாபு, தனஞ்செயா, அரிமாதவ், கண்காணிப்பாளர் கோதண்டபாணி, ஸ்ரீதர் பாபு, நாகேஸ்வர்ராவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
