433 மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப்

இடைப்பாடி, ஜன.10: இடைப்பாடி அரசு அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமை வகித்து பேசினார். மேலும், 433 மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், நகர்மன்ற தலைவர் பாஷா, தாசில்தார் வைத்தியலிங்கம், மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பூவா கவுண்டர், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் டாட்டா, பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பாலாஜி, பேரூராட்சி தலைவர் சுந்தரம், பிரபு கண்ணன், ராஜவேல், கல்லூரி லேப்டாப் திட்ட அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: