தினசரி, வாரச்சந்தை ஏலம் ரத்து

தாரமங்கலம், ஜன.10: தாரமங்கலம் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை ஏலம் ரத்து செய்யப்பட்டது. தாரமங்கலம் நகராட்சி தினசரி சந்தை, வாரச்சந்தை, பஸ் நிலைய கழிப்பிடம், ஆடு அடிக்கும் தொட்டிக்கான ஏலம் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஏலத்திற்கு ஆணையாளர்(பொ) சுதர்சன் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். முதலில் வாரச்சந்தை ஏல நடவடிக்கை தொடங்கியது.

அரசு நிர்ணயத்த தொகையை விட குறைத்து ஏலம் கோரியதால் 14வது முறையாக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து வாரச்சந்தை ஏல நடவடிக்கை தொடங்கியது. ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு நிர்ணயத்த தொகையை விட குறைத்து கோரியதால் ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பஸ் நிலைய கழிப்பிடம் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டிக்கு ஏலம் கோரப்பட்டது. இதில், பஸ் நிலைய கழிப்பிடம் ரூ.1.35 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆடு அடிக்கும் தொட்டி ரூ.70 ஆயிரத்திற்கு ஏலம் போனது. ரத்து செய்யப்பட்ட தினசரி மற்றும் வாரச்சந்தை ஏலம் பின்னர் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Related Stories: