மதுரை: தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கான அரசாணை 2 வாரங்களில் வெளியிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.
