சென்னை: சென்னையில் 2025ஆம் ஆண்டு கொலை, கொள்ளை, வழிப்பறி, வாகன திருட்டு குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர் குற்றங்கள் புரிந்த 1,092 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 66 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுதரப்பட்டுள்ளது. 2023, 24 ஆண்டுகளை ஒப்பிடுகையில் 2025ல் திருட்டு சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.
