அரசு போக்குவரத்து கழகத்தில் ‘தமிழ்நாடு’ நீக்கியது ஜெயலலிதா: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

அரியலூர்: அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தீபாவளி , பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்து வசதி தேவைப்படும் இடங்களில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர், புதிய வால்வோ பேருந்து சேவையை தொடங்கி வைத்த பிறகு, இன்றைக்கு சிறப்பான முறையிலே அது புக்கிங் சென்று கொண்டிருக்கிறது. மக்கள் நல்ல முறையில் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். அரசு போக்குவரத்து கழகம், மீண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படுமா?

என்ற கேள்விக்கு, ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் என்று பெயர் வைத்தது முத்தமிழறிஞர் கலைஞர். அந்த பெயர் நீளமாக இருக்கிறது என்று ஜெயலலிதா ஆட்சி காலத்திலே எடுத்து விட்டார்கள். போராடுகின்ற தலைவர்கள் எல்லாம் ஒரு வார்த்தை ஜெயலலிதாவை பேசுவதில்லை. தற்பொழுது மாற்றியது போல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள். தேவைக்கு ஏற்ப தேவையான நேரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: