வேட்டி வாரத்தை முன்னிட்டு சீனியர்களுக்கு ரூ.695, ஜூனியர்களுக்கு ரூ.495 வேட்டி-சட்டை காம்போ: ராம்ராஜ் காட்டன் நிறுவனர் அறிமுகம்

சென்னை: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சார்பில் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஒரு வாரம் ஆண்டுதோறும் வேட்டி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதிய ரகம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு வேட்டி வாரத்தை முன்னிட்டு திருப்பூரில் உள்ள ராம்ராஜ் காட்டன் தலைமை அலுவலகத்தில் மேட்சிங் மென்ஸ் கலெக்சன் சீனியர் செட் ரூ.695க்கும், குழந்தைகளுக்கு ரூ.495க்கும் என வேட்டி மற்றும் சட்டை காம்போ அறிமுகம் செய்யப்பட்டது. இதனை ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், தலைமை செயல் நிர்வாகிகள் செல்வகுமார், கணபதி மற்றும் பேரன்கள் ஆரவ் மற்றும் ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்பின், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து ராம்ராஜ் ஷோரூம் மற்றும் அனைத்து முன்னணி கடைகளில் மேட்சிங் வேட்டி சட்டைகள் ரூ.695க்கும், சிறுவர்களுக்கான மேட்சிங் செட் ரூ.495-க்கும் விற்பனை செய்யப்படும். நமது சுதேசி மற்றும் கலாச்சாரம் வளர வேண்டும் என குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் வேட்டி வாரத்தில் பங்கெடுத்து நெசவாளர்களின் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும்.

ரூ.595 மற்றும் ரூ.695க்கு கல்ச்சர் கிளப் கலர் சர்ட்டுடன் வேட்டிகள் மற்றும் கலாசாரத்தை பிறப்பிலிருந்து ஊக்கப்படுத்த உறுதிப்படுத்தும் விதமாக ரூ.395 மற்றும் ரூ.495-க்கு லிட்டில் ஸ்டார் கலர் சர்ட்டுகள் மேட்ச்சிங் பார்டர் வேட்டிகளும் பிரத்யேகமாக இந்த ஆண்டு வேட்டி வாரம் 2026-ல் விற்பனைக்கு கிடைக்கப்பெறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: