சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 167வது பட்டமளிப்பு விழா வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பல்கலைக்கழகத்தின் 167வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22ம் தேதி (வியாழன்) நடைபெற உள்ளது.
விழாவில், பிஎச்டி பட்டதாரிகள் நேரில் பட்டம் பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in எனும் இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டமளிப்பு விழாவுக்கான கட்டணமாக ரூ.525 செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஜன.10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
