கண்ணை மூடி மோடிக்கு ஆதரவு எடப்பாடிக்கு பதவி ஆசை: சண்முகம் அட்டாக்

மதுரை: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக் கோரி மதுரை, முனிச்சாலை பகுதியில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியதாவது: 100 நாள் வேலை திட்டத்தை ஒரேடியாக திட்டத்தை ஒழித்துகட்டும் விதமாக கடந்த, 18ம் தேதி நாடாளுமன்றத்தில் ‘விபி ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர்.

தமிழகம், கேரளா போன்ற பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கான நிதியை வழங்காமல் பாரபட்சமாக ஒன்றிய அரசு நடந்து வருகிறது. இதற்கு, அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது. எடப்பாடிக்கு பதவி ஆசை மட்டும் தான் கண்ணுக்கு தெரிகிறது. உழைப்பாளி மக்களுக்கு எதிராக, தமிழக மக்களுக்கு எதிராக எதை செய்தாலும் அதை கண்ணை மூடிக் கொண்டு எடப்பாடி ஆதரித்து வருகிறார். கரை நல்லது என, ஒரு விளம்பரத்தில் வருவதைபோல் மோடி அரசு எதை செய்தாலும் நல்லது என எடப்பாடி ஆதரவு தெரிவித்து வருகிறார். இவ்வாறு பேசினார்.

Related Stories: