10 கிலோ எறும்புத்தின்னி தமிழகத்திற்கு கடத்தல்

சென்னை: ஆந்திர மாநிலத்திலிருந்து வேட்டையாடப்பட்ட 10 கிலோ ஆண் எறும்புத்தின்னியை தமிழகத்திற்கு கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது ெசய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 வாகனங்கள் பறிமுதல் செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வேட்டையாடி 10 எறும்புத்தின்னி கடத்தி வரப்படுவதாக திருவளளூர் மாவட்ட வன அலுவலர் சுப்பையாவுக்கு தகவல் கிடைத்து.

இதனையடுத்து நேற்று காலை மாவட்ட வனச்சரக அலுவலர் அருள்நாதன் மற்றும் வனவர்கள் ரவிக்குமார், சசிக்குமார் ஆகியோர் வேப்பம்பட்டு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி நிறுத்தினர்.

ஆனால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் தப்பி மோட்டார் சைக்கிள்களை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில், ஆட்டோவில் சோதனை மேற்கொண்ட போது 10 கிலோ எடை கொண்ட ஆண் எறும்புத்தின்னியை கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, வனச்சரக அலுவலர்கள் எறும்புத்தின்னியை மீட்டனர்.

Related Stories: