99% பேர் என் பக்கம் உள்ளனர் அன்புமணியின் பொய்யும் புரட்டும் எடுபடாது: ராமதாஸ் உறுதி

திண்டிவனம்: அன்புமணியின் பொய்யும், புரட்டும் எடுபடாது என ராமதாஸ் தெரிவித்தார். தந்தை பெரியாரின் 52ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் நேற்று மரியாதை செலுத்தினர். இதன் ஒருபகுதியாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், நிருபர்களை சந்தித்த ராமதாசிடம், சேலத்தில் பாமக நிறுவனர் நடத்தும் பொதுக்குழு செல்லாது என அன்புமணி தரப்பு கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘பொய்யர்கள் புரட்டர்கள் எது வேணாலும் சொல்வார்கள். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. 99% பாட்டாளி மக்கள் என் பக்கம்தான் உள்ளார்கள், பொய்யும் புரட்டும் எடுபடாது. அவர் (அன்புமணி) பாமகவில் இல்லை. அவரை ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். அவர் எது வேணாலும் சொல்லுவார்’ என்றார்.

Related Stories: