சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் இரா.நல்லகண்ணுவின் 101வது பிறந்த நாள் 26ம் தேதி வருகிறது. கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது.
நல்லகண்ணு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். நல்லகண்ணுவை அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அருகில் சென்று, அவரோடு உரையாட அனுமதிப்பதில்லை என்பதால், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அவரை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்,
